Monday, September 30, 2013

சென்னையில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை செல்போனில் அறியலாம்





வி. சாரதா :தி இந்து :திங்கள், செப்டம்பர் 30, 2013


சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய கட்டணங்களைப் பின்பற்றுவதில்லை என்று பரவலாக மக்கள் கருதுகின்றனர். 

செல்போன்களின் மூலமாகவே கட்டணத்தை அறியும் புதிய வசதியை சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

ஆட்டோ கட்டணம் தொடர்பாக, மக்களுக்கு உதவும் வகையில் தனியார் மென்பொருள் நிறுவனமொன்று ஆட்டோ கட்டணங்களை செல்போன்களில் தெரிந்து கொள்ளும் வசதியை அறிவித்து உள்ளது. "சுவாதி சாஃப்ட் சொல்யூஷன்ஸ்" நிறுவனம் வடிவமைத்துள்ள "சென்னை ஆட்டோ கட்டணம்" (chennai autofare) என்ற ஆண்ட்ராய்ட் செயலியில் (ஆப்ஸ்) புறப்படும் இடத்தையும் போய்ச் சேரும் இடத்தையும் டைப் செய்தால் போதும். பயணத்துக்கான கட்டணத்தை எளிதில் தெரிந்துகொள்ளலாம். இதனை ஒரு வாரத்தில் 2300 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

புகார் வசதி

மேலும் இந்த செயலியில் புகார் எண்ணும் சேர்க்கப்பட உள்ளது. கட்டணங்களைப் பற்றியோ அல்லது பயணத்தின்போது வேறெந்த இடையூறு ஏற்பட்டாலோ இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்

 இதைப் பற்றி போக்குவரத்து இணை ஆணையரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக "சுவாதி சாஃப்ட் சொல்யூஷன்ஸ்" நிறுவனர் கே.எஸ். சுதாகர் தெரிவித்தார்.

இந்தச் செயலி சென்னையின் போக்குவரத்து நெரிசல்களையும் அதனால் ஏற்படும் தாமதத்தையும் கணக்கில் கொள்ளும் சாமார்த்தியமான செயலி. 

இது சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காசிமேடு செல்வதற்கு ரூ.225.40-ல் இருந்து ரூ.235 வரை ஆகக்கூடும் என்று காட்டும். ஆட்டோ மீட்டர் இந்த விலை எல்லையில் எவ்வளவு காட்டினாலும் அது சரி என்று தெரிந்துக்கொள்ளலாம். இதில் சராசரி காத்திருப்பு கட்டணத்தையும் அறியலாம்.

பயணி எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் பயணித்துள்ளார் என்ற தகவலை ஆட்டோ மீட்டரின் படத்துடன் செயலியே துல்லியமாக பதிவு செய்வதற்கான மென்பொருளை தயார் செய்து வருகின்றனர். இது செயல்பாட்டிற்கு வந்தால் கட்டணத்தையும் துல்லியமாக கணிக்க முடியும். எந்த புகார் எழுந்தாலும் அதனை சுமுகமாக தீர்த்துவிட முடியும்.

அடையாறிலிருந்து கலாக்ஷேத்ரா சாலைக்கு செல்லும் சங்கரி ராஜ்குமார், "புதிய கட்டண அட்டையை வைத்திருந்தால் கூட நான் எவ்வளவு கிலோ மீட்டர் பயணித்திருக்கிறேன் என்பதை அறிய முடியாது. 

இந்த செயலியில் அந்த தகவலும் கிடைப்பதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது" என்றார்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவர்களில் 48 சதவீதம் பேர் பெண்கள். இதுதவிர, bookmycallauto.com என்னும் மற்றொரு ஆண்ட்ராய்ட் செயலியல் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 இதன்மூலம் செல்போனில் இருந்தே ஆட்டோக்களை நாம் இருக்கும் இடத்துக்கு வரவழைத்து கொள்ளலாம். 

செல்போனின் நவீனம் மக்களுக்குப் பெரிதும் உதவிகரமாக உள்ளது என்பது மிகையாகாது.

சஞ்சீவனம். :பாரம்பரியத்தின் தனிச் சுவை


ஜெய்குமார் :திங்கள், செப்டம்பர் 30, 2013
Return to frontpage:

குளுமையான மூங்கில் பந்தல், ஓரமெங்கும் குட்டிக் குட்டித் தொட்டிச் செடிகள் எனக் கேரளச் சாலைக்குள் நடந்து செல்லும் உணர்வுடன் மனதை அரவணைத்துக் கொள்கிறது நுங்கம்பாக்கம் சாலையில் உள்ள சஞ்சீவனம்

இது பாரம்பர்ய உணவுகளுக்கான நிகழ்காலக் காட்சியகம். ஓணம் பண்டிகையின் நாயகன் மகாபலி ராஜாவை வரவேற்பதைப் போல பணியாளர்கள் வாஞ்சையுடன் வரவேற்கிறார்கள். 

இவ்வுணவகத்தின் பிரசித்திபெற்ற உணவு ராஜகீயம். ராஜகீயம் என்னும் சொல்லுக்கு ராஜ பாவனை, நல்லாட்சி எனப் பொருள் தருகிறது அகராதி. ஆனால் விருந்துண்பவர்களுக்கு ராஜ உபசாரம் அளிப்பதாலே இப்பெயர் வந்த்திருக்கும் எனச் சாப்பிட்டு முடித்தவர்கள் எண்ணலாம். அந்த அளவுக்கு இருக்கிறது இதன் சுவையான உணவும் உபசரிப்பும்.

உள்ளே நுழைந்துமே உணவகம் எங்கும் ஒரு மெல்லிசைபோல நிறைந்திருக்கும் அருஞ்சுவையின் மணம் வருபவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. 

பரிமாறத் தலை வாழை இலை விரிக்கிறார்கள். முதலில் சுவைக்க நேந்திரம் பழத் துண்டுகளும் தேங்காய்த் துருவலும் தருகிறார்கள். பொதுவாக உணவு உட்கொள்வது குறித்துப் பல தரப்பட்ட சந்தேகங்கள் உள்ளன.

 சத்தான உணவை உணபதை விட அதைப் எப்படி உண்ண வேண்டும் என்பதே முக்கியம். 

இதற்கு இலக்கணமே இருக்கிறது. இங்குள்ள பணியாளர்களே தாங்கள் பரிமாறும் பதார்த்தங்களை எதையெதை எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பண்புடன் விளக்குகிறார்கள்.

 இவை எல்லாவற்றுக்குள்ளும் இருக்கு நம் உணவுப் பாரம்பர்யத்தின் நுட்பம் வியக்கக்கூடியதாக இருக்கிறது.

அதன் பிறகு ஐந்து வகையானசாறுவருகிறது. பேரீச்சம் பழச் சாறு, கடலைச் சாறு, காய்கறிச் சாறு, கறிவேப்பிலை சேர்ந்த மோர், செவ்வரிசிக் கொதி நீர் என இவை ஐந்தும் வலமிருந்து இடமாக அடுக்கிவைக்கப்படுகின்றன. 

இதை இதே முறையில் வலதுமிருந்து இடமாகப் பருகச் சொல்கிறார்கள். சாறு பருகும் முன் முதலில் அதன் வாசனையை நுகர்ந்து உள்ளுக்குள் வாங்கிக்கொள்ளும்போதே ஓர் ஆரோக்கியமான அனுபவத்திற்கு உடல் தயாராகிக்கொள்வதை உணர முடிகிறது.

அடுத்ததாக வேகவைக்காத புட்டு பரிமாறப்படுகிறது. இது மிதமான இனிப்புடன் கூடுதல் சுவை தருகிறது. வாயினுள் ஒட்டிக்கொள்ளாமல் எளிதாக மென்று விழுங்கக்கூடியதாகவும் இருக்கிறது. 

அடுத்ததாக காய்கறி சாலட். பாதி வேகவைத்த காய்கறிக் கூட்டுகள், அதைத் தொடர்ந்து முழுவதும் வேகவைத்த காய்கறிக் கூட்டுகள் எனச் செவ்வரிசிச் சாப்பாட்டுக்கு வருவதற்குள் ஐந்து நிலைகளைக் கடந்துவிடுகிறோம். 

இவ்வளவு சாப்பிட்டும் சோர்வோ அயற்சியோ ஏற்படுவதில்லை. உற்சாகத்துடனும் வழக்கத்தைவிடக் கூடுதலான ஆவலுடன் இந்த உணவு விளையாட்டில் ஈடுபடத் தோன்றுகிறது. முக்கிய உணவாக செவ்வரிசிச் சோறும் அரிசிச் சோறும் பருப்புடன் அளிக்கப்படுகின்றன. 

இதுமட்டுமல்லாது வழக்கமான சாம்பார், மோர்க் கொழம்பு, ரசம், மோர் எல்லாமும் புதிய சுவையில் கிடைக்கின்றன.அடுத்ததாக தித்திப்பான பாயசம். 

இவை அனைத்தையும் உண்டு முடித்ததும் சிறு கிண்ணத்தில் தேன் தருகிறார்கள். பாயாசம் சாப்பிட்ட பிறகு அந்தச் சுவையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகத் தேனைத் தவிர்க்க நினைத்தால் தேன் செரிமானத்திற்காக அளிக்கப்படுகிறது என்கிறார்கள். 

இங்குள்ள உணவுத் தயாரிப்பு முறையில் புளி, சீனி, மிளகாய்த் தூள் போன்ற உடலுக்கு அசெளகர்யம் தரும் பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன. இதற்கு மாற்றாக தக்காளி, நாட்டுச் சர்க்கரை, மிளகு போன்றவற்றையே பயன்படுத்துகிறார்கள். அதனால் இந்த உணவு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

இறுதியாகத் தரப்படும் வெற்றிலை கூட பான்மசாலா, சுண்ணாம்பு இல்லாமலே தருகிறார்கள். இவ்வளவு உணவுகளைச் சாப்பிட்ட பிறகு அசதியாக உறங்கலாம் என்றெல்லாம் தோன்றவில்லை. 

அதுமட்டுமல்ல சாப்பிட்ட 3மணி நேரத்திற்குள் உணவு செரித்துத் திரும்பவும் அந்தச் சுவையை மனம் அசைபோடத் தொடங்குகிறது. 

அதுதான் நம் பாரம்பரியத்தின் தனிச் சுவை.

Saturday, September 21, 2013

சாதனை பெண்கள் : ஜெயித்துக் காட்டிய ஜெயலட்சுமி டீச்சர்

குழந்தைகளுடன் ஜெயலட்சுமி டீச்சர்
குழந்தைகளுடன் ஜெயலட்சுமி டீச்சர் 

  தி இந்து’ :கரு. முத்து :சனி, செப்டம்பர் 21, 2013

பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதையே கவுரவ
 குறைச்சலாக நினைக்கும் இந்தக் காலத்தில், அரசு பள்ளிக்கும் 
ஒரு கவுரவத்தைக் கொடுத்திருக்கிறார் ஜெயலட்சுமி டீச்சர்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ளது பழையார். 
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளைகூட இந்த ஆண்டு 
தனியார் பள்ளிக்கு பைக்கட்டு தூக்கவில்லை. பள்ளிக்குப் 
போக வேண்டிய அத்தனை பிள்ளைகளும் இங்குள்ள 
அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆனந்தமாய் போய்க்
 கொண்டிருக்கிறார்கள்.

 காரணம், ஒன்றாம் வகுப்பில் பாடம் சொல்லித்தரும் 
ஜெயலட்சுமி டீச்சர்.

''மிகப்பெரிய மீனவ கிராமமான இந்த பழையாரில் மக்களுக்கு
 படிப்பு மேல் ஆர்வமே கிடையாது. ஆணும் பெண்ணும் கடலுக்கு 
போயிருவாங்க. கடலுக்கு போக ஆளு வேணுமேங்கிறதுக்காக
 நிறைய புள்ளைங்கள பெத்துக்குவாங்க. ஆனா, படிக்க 
வைக்கமாட்டாங்க. பிழைப்புத்தான் அவர்களுக்கு பிரதானம்.
 படிப்பு ரெண்டாம்பட்சம்தான். போன வருஷம் வரைக்கும் 
இதுதான் நிலைமை. 

ஆனா, இந்த வருஷம் ஒன்றாம் வகுப்பில் 
சாரை சாரையாய் பிள்ளைகளைக் கொண்டுவந்து
 சேர்த்தி ருக்கிறார்கள். காரணம் படிப்பு மீது அவர்களுக்கு
 வந்திருக்கும் ஆர்வம். அதற்கு காரணம் 
எங்க ஜெயா டீச்சர்” பெருமிதத்துடன் சொல்கிகிறார் 
பள்ளித் தலைமையாசிரியர் மஞ்சுளா.

அப்படி என்ன சாதித்துவிட்டார் இந்த ஜெயலட்சுமி டீச்சர்? 
அவரிடமே கேட்கலாம்..

''புள்ளைங்கள பள்ளிக்கு அனுப்புறதுல இங்குள்ள
 மக்களுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்சுது. 
அந்த மனப்பான்மையை உடைக்கணும்னு நெனச்சேன். 
அதுக்காக மீனவ மக்களை முடிஞ்சவரைக்கும் சந்திச்சுப் பேசி,
 கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி புரிய வச்சேன்
. அப்படி போற நேரங்கள்ல அவங்க வீட்டு சின்னப்
 புள்ளைங்ககிட்ட பரிவு காட்டிப் பேசுவேன். புள்ளைங்களுக்கு
 என்னை ரொம்ப புடிச்சுப் போச்சு. டீச்சர்.. டீச்சர்னு சுத்த 
ஆரம்பிச்சிட்டாங்க. அப்படியே அவங்கள பள்ளிக்கூடத்துக்கு 
இழுத்து வந்துட்டேன். பெத்தவங்களும் சந்தோஷமா வந்து
 அட்மிஷன் போட்டுட்டு போனாங்க.

ஆசிரியர்னா கையில பிரம்பு வைச்சிருப்பாங்க; சேட்டை 
பண்ணுனா வலிக்க புடைக்க அடிப்பாங்கன்ற நினைப்பை 
முதலில் தவிடுபொடி ஆக்கினேன். குழந்தைங்களோட 
உக்காந்து பேசி, அவங்களோட சின்னச் சின்ன ஆசைகளுக்கு
எல்லாம் காதுகுடுத்து அவங்களுக்கு என் மீது நம்பிக்கை வர 
வச்சேன். இதெல்லாம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.
 ஆசிரியர்தான் பிள்ளைங்கள அடிப்பார்னு கேள்விப்பட்டுருப்பீங்க. 
என்னோட பிள்ளைங்க, ‘போங்க டீச்சர்’னு எத்தன தடவ
 என்னை செல்லமா முதுகுல தட்டிட்டு போயிருக்குங்க தெரியுமா?
பள்ளிக்கூடத்துல பாடம் படிக்கிறோம்கிற பயம் இல்லாத 
வகையில அந்தப் புள்ளைங்களுக்கு அத்தனையையும்
 கற்றுக் கொடுத்திருக்கிறேன். பிள்ளைங்களை ’போங்க
 வாங்க’ன்னு மரியாதையாத்தான் அழைப்பேன். எதுவா
 இருந்தாலும் எங்கிட்ட பகிர்ந்துக்கிற பக்குவத்தை பிள்ளைங்களுக்
கு வளர்த்திருக்கேன். 

என் அன்பையும் அரவணைப்பையும் புரிஞ்சுக்கிட்டதால
 இந்தப் புள்ளைங்க ஒருநாள்கூட பள்ளிக்கு வராம இருந்ததில்லை
. அவங்களோட நடத்தை மாற்றத்தையும் ஒழுக்கத்தையும்
 தெரிஞ்சுக்கிட்ட பெற்றோர்கள் பிள்ளைங்கள ஒருநாள் கூட 
வீட்டுல வைச்சுக்காம பள்ளிக்கு அனுப்பிவைச்சிடுறாங்க.

இன்னொரு முக்கியமான விஷயம், சுகாதார மாற்றம்.
 குளிக்காம, தலைசீவாம அப்படியே வந்துக்கிட்டிருந்த 
பிள்ளைகளுக்கு சுத்தமும் சுகாதாரமும் எவ்வளவு 
முக்கியம்னு அக்கறையோடு எடுத்துச் சொன்னேன். 
அதையும் புரிஞ்சிக்கிட்டு அழகா ஆரோக்கியமா மாறிட்டாங்க’’
வெற்றியின் ரகசியத்தை வெளிப்படையாய்
 சொன்னார் ஜெயலட்சுமி டீச்சர்.

ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மாணவர்கள் குறைந்தது நாற்பது 
ஆங்கில ரைம்ஸ்களை ஆட்டம் பாட்டத்துடன் ஒப்பிக்கிறார்கள். 
முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை உற்சாகத்துடன் 
பாடுகிறார்கள். ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் போடும் உத்தரவுகளை 
அழகாய் புரிந்து கொள்கிறார்கள். ஐம்பதிலிருந்து நூறு ஆங்கில 
வார்த்தைகளுக்கு அழகுத் தமிழில் அர்த்தம் சொல்கிறார்கள். 
இவை எல்லாவற்றையும்விட, நாள் முழுவதும் உற்சாகம் குறையாமல் 
இருக்கிறார்கள். இவை எல்லாம் ஜெயலட்சுமி டீச்சரால்
 இந்தப் பள்ளி கண்ட பலன்கள்.

'’தனியார் பள்ளி மாணவர்களுக்கு சற்றும் சளைக்கமாட்டார்கள் 
என் மாணவர்கள். அவர்களைவிட கூடுதலாகவே இவர்களுக்கு
 கல்வி அறிவு இருக்கும்’’ என்று சொல்லும் ஜெயலட்சுமி டீச்சர்,
 எல்லா பாடங்களையும் செயல்முறையோடுதான் நடத்துகிறார். 

செயல்வழிக் கற்றலில் இன்று என்னென்ன தொழில்நுட்பங்கள் 
வந்திருக்கிறதோ அத்தனையையும் வாங்கிப் பார்த்து அதில்
 இருப்பவற்றை உடனே வகுப்பறையில் செயல்படுத்திவிடுகிறார்.
இவர் பாடம் நடத்தும் முறையைப் பார்த்து வியந்த முதன்மை 
கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் 
ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆசிரியர்கள் அதை வீடியோ 
படமாக்கி மாவட்டம் முழுவதுமுள்ள தலைமை ஆசிரியர்களுக்
கு போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

 ஆர்வமுள்ள
 ஆசிரியர்கள் பள்ளிக்கே வந்து ஜெயலட்சுமியின் வகுப்பறை
 உத்திகளை கவனித்துக் கொண்டு போய் தங்கள் வகுப்பறையில் 
செயல்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படி, மாவட்டத்திலேயே முன்னுதாரண ஆசிரியராக
 இருக்கும் ஜெயலட்சுமி டீச்சருக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம். 
அங்கிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பழையாரில் தங்கியிருந்து
 சாதனையை தொடர்கிறார்.

தங்கள் பிள்ளைகள் கட்டுச் செட்டாய் பாடம் படிக்கும் அழகை 
பழையார் கிராமத்து மக்கள் தினம் தினம் வந்து பார்த்து
 ரசித்துவிட்டுப் போகிறார்கள். ''படிச்சு என்ன பண்ணப்போவுதுங்க, 
பாடு பார்க்கிற வயசு வர வரைக்கும் இருந்துட்டு அப்புறம்
 பாடுக்கு போவட்டும்னுதான் நெனைச்சிருந்தோம். 
ஆனா இப்ப, எங்கவூட்டு புள்ளைங்க அழகா துணி மணி
 உடுத்துறதும் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஸ்ல பேசுறதும்
 ரொம்ப அழகா இருக்கு. புள்ளைங்கள படிக்க வைக்கணும்கிற
 ஆசை எங்களுக்கும் பள்ளிக்குப் போகணும்கிற ஆர்வம் 
அதுகளுக்கும் இப்பத்தான் வந்திருக்கு” என்கிறார் 
பழையாரைச் சேர்ந்த அமிர்தவள்ளி.

படம் எடுப்பதற்காக ஜெயலட்சுமி டீச்சரை தனியாக அழைத்தால்,
 அவரை விடாமல் கையை பிடித்துக் கொண்டு கூடவே
 சங்கிலித் தொடராய் வருகிறார்கள் அந்தக் குழந்தைகள். 

தள்ளிப் போகச் சொன்னால் டீச்சரிடம் செல்லமாய் கோபிக்கிறார்கள். 
அவர் சமாதானம் சொன்னதும், ஓடிவந்து முகம் தடவி
 தலை கலைக்கிறார்கள் அந்தப் பிஞ்சு மக்கள். 

திடீரென டீச்சரை சுற்றி நின்று ஆட்டம் ஆடுகிறார்கள். 

அங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தாயின் கருவில் 
இருக்கும் தலைச்சன் பிள்ளையைப் போல் நிம்மதியாய்
 இருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள்.

மூலதனம் ஒரு தடையில்லை : டூவீலரில் ஆபீஸ்.. சாதிக்கும் தம்பதி

டூவீலரிலேயே ஏஜென்சி நடத்தும் சீனிவாசன் - மினி மோள் தம்பதி

டூவீலரிலேயே ஏஜென்சி நடத்தும் சீனிவாசன் - மினி மோள் தம்பதி


தி இந்து’ :என். சுவாமிநாதன்:சனி, செப்டம்பர் 21, 2013


நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தை கடக்கு
ம் ஒவ்வொருவரும் மினிமோள் - சீனிவாசன் தம்பதியின்
 சாலையோரத்து மினி அலுவலகத்தை பார்க்காமல்
நகரமுடியாது. அலுவலகம் என்றதும் சூட்டை
 தணிக்கும் குளுகுளு ஏ.சி. வரை சகல 
வசதிகளும் இருக்குமோ என கற்பனை பண்ண வேண்டாம்.

ஒரு டூவீலரில்தான் இவர்களது அலுவலகமே இயங்குகிறது. 
இரண்டு ஸ்டாப்லர், இரண்டு பேனா, இரண்டு ரைட்டிங் பேடு, 
கொஞ்சமாய் எழுதும் தாள்கள்.. இவைதான் இந்த
 அலுவலகத்தின் சொத்து.

பரந்து விரிந்த திறந்தவெளி கூடாரத்தில் இயற்கையின்
 மடியில் மழையை ரசித்து வெயிலை பொறுத்து 
தன்னம்பிக்கையோடு தொழில் செய்கிறார்கள்
 இந்த தம்பதி. பகட்டு விளம்பரங்கள் ஏதுமில்லாம
ல் பாஸ்போர்ட், பான்கார்டு எடுத்துக் கொடுக்கும் 
ஏஜென்ட் தொழிலைத்தான் இப்படி வித்தியாசமாய் 
செய்துகொண்டிருக்கிறார்கள்.

’தி இந்து’ தமிழ் பத்திரிக்கையில் இருந்து வந்திருக்கிறோம் 
என்று அறிமுகப்படுத்திக் கொண்டதுமே,
’’உட்காருங்கண்ணே...” என்று படபடத்த மினிமோள், 
சுதாரித்துவிட்டு, ”உக்கார நாற்காலிகூட இல்ல..
 உக்கார சொல்லுதேன் பாருங்க.. இப்புடித்தான் சில 
நேரங்கள்ல நம்மையும் அறியாம நம் தமிழ் பண்பாடு 
வெளிப்பட்டுருதுண்ணே” என்றவாறே பேச்சை ஆரம்பித்தார்.
''எங்களுக்கு கல்யாணமாகி 13 வருஷம் ஆகுது. 
கண்ணுக்கு அழகா ரெண்டு குழந்தைகள பெத்துக்கிட்டோம்
. இவங்க (சீனிவாசன்) தங்க நகை வேலை பாத்துட்டு 
இருந்தாங்க. ஆரம்பத்துல தொழில் நல்லாத்தான் இருந்துச்சு.
 அப்புறமா சந்துக்கு சந்து நகைக்கடைகளை தெறக்க 
ஆரம்பிச்சதும் எங்க தொழில் படுத்துக்கிச்சு. தொழிலையே 
விட்டுட்டாங்க. அங்க இங்க சேமிப்புல இருந்த காசு கஞ்சி
 குடிக்க பத்துச்சு. ஆனா, புள்ளைங்களுக்கு ஃபீஸ் கட்டுறதுலருந்து
 எல்லாத்துக்கும் மத்தவங்க கைய எதிர்பார்க்க வேண்டியதாப்
 போச்சு. பண கஷ்டத்தை சமாளிக்கிறதுக்காக, கொஞ்சநாள்
 இன்னொரு நகைக்கடையில வேலை பாத்தாங்க. அதுவும்
 சரிப்பட்டு வரல. அப்புறமா இன்னும் என்னென்னமோ தொழில்
 பண்ணிப் பாத்தோம். எதுவுமே சரியா வராம, கடைசியிலதான்
 இந்த வேலைக்கு வந்தோம். இப்ப கஷ்டமில்லாம வண்டி ஓடுது’’ 
மினிமோள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம்.

அவருக்கு வேலை கொடுத்துவிட்டு தொடர்கிறார் சீனிவாசன்.
 ''மொதலாளியா இருந்துட்டு தொழிலாளியா இன்னொரு 
இடத்துல போயி வேலைக்கு இருக்கதுல நிறைய சிக்கல் 
இருக்கு. இது அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்ட உண்மை.
 யாருக்கிட்டயும் கைகட்டி நின்னு வேலை பாக்காம சொந்தமா
 தொழில் பண்றதுதான் சரின்னு முடிவெடுத்தேன். புரோட்டா
 கடையில ஆரம்பிச்சு ஒவ்வொரு தொழிலா யோசிச்சோம். 
கடைசியிலதான் இந்த வேலைய கையில எடுத்தோம். 
இதுக்கு கடை பிடிக்க ஊரு பூரா சுத்துனேன். எங்க 
பொருளாதாரத்துக்கு ஏத்த மாதிரி எங்கயுமே கடை 
சிக்கல. அப்பத்தான், ‘நம்ம டூவீலர்லயே ஆபீஸ் போட்டா
 என்ன’ன்னு மினிமோள் ஐடியா குடுத்தாங்க. மொதல்ல
 கொஞ்சம் யோசனையா இருந்துச்சு. அப்புறமா துணிஞ்சு
 இறங்கிட்டோம். மழைக்கும் வெயிலுக்கும் குடையை
 புடிச்சிக்கிட்டு தொழில் பாத்துட்டு இருக்கோம்.

எனக்கு பெருசா படிப்பு இல்லைங்க. மினிமோள் பி.எஸ்.சி 
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுருக்காங்க. அவுங்கதான் இங்க
 விண்ணப்பங்களை எழுதுறாங்க. நான் எடுத்துக் குடுத்து 
காசு வாங்குறதோட சரி. இந்த சின்னஞ் சிறிய வண்டியில 
பாஸ்போர்ட் வேலை, பான்கார்டு, வேலைவாய்ப்பு 
அலுவலகப் பதிவு, புதுப்பித்தல்னு சகல வேலையும் 
பண்ணிக் குடுக்குறோம். திக்குத் தெரியாம நின்ன கட்டத்துல
நமக்கு கைகுடுத்த தொழில்ங்கிறதால இதை சேவையாவே 
செஞ்சுட்டு இருக்கோம். குறைவான கட்டணம்தான் வாங்குறோம்.
 கிராமத்து சனங்க வந்தா குடுக்குறத வாங்கிட்டு வேலைய 
முடிச்சுக் குடுத்திருவோம். வேலைக்கு இருந்த இடங்கள்ல 
நான் நாலு பேரைப் பாத்து ‘வாங்க சார், வாங்க சார்’னு கூப்பிட்
ட காலம் போயி, இப்ப என்னைய பாத்து நாலு பேரு ‘வாங்க 
சார்’னு கூப்பிடுறாங்க. சந்தோசமா இருக்கு.
இதுல வர்ற வருமானத்தை வைச்சு டவுனுக்குள்ள ஒரு 
கடையை பிடிச்சுப் போட்டுட்டோம். ஆனாலும், பழசை 
மறக்க முடியாம அந்தக் கடையை பூட்டிப் போட்டுட்டு
 இங்கேயே இருந்துட்டோம் ” அழகாய் சிரிக்கிறார் சீனிவாசன்.

வாழ்க்கையில் வெற்றிப்படிகளை எட்டிப்பிடிக்க 
மூலதனம் ஒரு தடையில்லை என்பதற்கு இந்தத் தம்பதி
 நல்ல உதாரணம்!

Salads : The green way to go

Make salad a part of your daily diet
Make salad a part of your daily diet

The Hindu :Moushmi Kishore ; September 20, 2013

Munching on a salad is one of the simplest and most satisfying

 ways of reducing your intake of calories. 


Here are some recipes

The best way to replenish the water and electrolyte needs of our body 
is through fresh servings of fruits and vegetables. Salad ingredients
 have plenty of nutrient-rich plants which contribute to our health.
 Adding a salad almost every day to your diet brings plenty of health
 benefits. Green leafy vegetables are nutrient-rich, as their leaves
 contain sunlight-catching and energy-converting chlorophyll. 
They do not contain cholesterol and are naturally low in calories 
and sodium.
Munching on a salad can be one of the most satisfying ways of 
reducing your calorie intake. You could add some walnut and 
salmon to include omega-3 fatty acids and choose a low-cholesterol, 
fat-free dressing. It prevents health complications and is a hearty
 meal in itself. You may customise by including different textures,
 flavours, and ingredients to find a mix that works for you.
Here are recipes of some delicious healthy salads tossed in 
dressings which are truly refreshing
Sprouts and Vegetable Salad
Ingredients
Beans sprouts (or any of your choice): 1 cup
Carrot cubes: quarter cup
Cucumber, finely chopped: quarter cup
Tomato, finely chopped: quarter cup
Lettuce: half cup
Shredded spinach: quarter cup
Chopped spring onion: 1 tbsp
Garlic clove, minced: 1
Ginger, minced: half inch piece
Vegetable stock: 2 tbsp
Vinegar: 1 tsp
Soy sauce: 1 tsp
Sesame oil: 1 tsp
Salt to taste
Method
Mix together all the ingredients for the dressing such 
as garlic clove, vegetable stock, vinegar, soy sauce 
and oil together in a bowl and refrigerate. Now, put all 
the ingredients except salt, separately in another bowl. 
Place the lettuce in a layer on a serving platter. 
Arrange all the vegetables on it, sprinkle a pinch of 
salt, and pour the dressing on it.
Chilled Noodle Salad
Ingredients
Noodles: 1 packet
Spring onion, finely chopped: 1
Capsicum, finely chopped: quarter
Carrot, grated: 1
Chilli flakes powder: 1 tsp
Salad oil: quarter cup
Vinegar: quarter cup
Black pepper powder: half tsp
Sugar: half tsp
Salt to taste
Method
Cook noodles by boiling in salt water. Rinse under cold water, 
and let it drain well. Set aside to cool. In a big bowl combine
 vegetables, dressing ingredients, and noodles until well 
coated. Cover the bowl and refrigerate for sometime
 before serving. Garnish with toasted sesame seeds if desired.

கொஞ்சம் சினிமா ...கொஞ்சம் பாப்கார்ன், The Lunchbox, Irrfan, Nimrat and a dabba make a delicious combo




FP :Deepanjana Pal Sep 19, 2013
Everyone eats food, but in some societies, being well-fed is more
 important than it is to others. India is one of them. 
Our days are all about meals and snacks
. Meetings, weddings, casual drop-ins, festivals; no matter what
 the occasion, our first question invariably is “What’s there to eat?”
So it’s curious that food hasn’t featured much in the other national
 obsession, Bollywood. In a few films, like BawarchiCheeni Kum
 and the recent Luv Shuv Tey Chicken Khurana, it’s made a
 half-hearted appearance as a device.
 Finally, in The Lunchbox, which opens in India this week after 
winning over audiences at international film festivals, we get a 
proper celebration of good, home-cooked Indian food.
Ila (Nimrat Kaur) is a housewife and a mother. The first time 
we see her, she’s cooking a meal that she packs into a steel tiffin
 carrier and gives to a dabbawalla. This is no common dabba 
made up of with watery curry and wilting veggies. Ila’s dishes 
are so colourful and plump with flavour that you can almost smell
 their aroma sitting on the other side of the silver screen. Ila hopes
 the lunchbox will land upon her husband’s desk, that he’ll taste it
 and there’ll be a moment of magic. This is precisely what happens.
 The only problem is, the one who is spellbound by the delicious
 dabba is not her husband.
A little mix-up sends characterless aloo gobhi to Ila’s husband and
 brings Ila’s cooking into Saajan Fernandez’s (Irrfan Khan) life. Saajan 
is a widower and a salaried man on the brink of retirement. Droopy,
 dour and dull, like a toy running on a dying battery, Saajan is the
 precise opposite of the crackling, simmering, gorgeous food that
 he eats, courtesy the mix-up.
Of course, Ila realises that same day that her husband didn’t get the 
meal she’d prepared so carefully. But there he is, barely registering
 her when he comes home, even though she’s standing in the same 
room with him. In contrast, there’s the licked-clean dabba whose 
absolute emptiness radiates appreciation for her. So, instead of 
speaking to thedabbawalla, Ila sends a note to the man who ate
 the lunch she prepared. He writes back – it’s an infuriatingly dry,
 humourless message – and with that, a relationship begins
 between these two lonely people.
Saajan’s life changes because of Ila’s dabba
It helps him make a friend of Aslam (Nawazuddin Siddique), the 
chirpy, young man who has been hired to replace Saajan at the
 office. As Saajan writes about his life in the notes he exchanges
 with Ila, he begins to savour what he has around him. And so,
 through the act of cooking and eating, two automatons come
 back to life.

There’s something timeless about The Lunchbox even though
 it’s set in the present. The trains, offices, dabbawallas, homes,
 cooking utensils – they’re all poignantly real. Debutant director 
Ritesh Batra’s The Lunchbox (he also wrote the film) is set in a 
familiar city, the one inhabited by the middle-class. There are no
 gangs or socialites here. Rather, it’s a labyrinth of relationships 
forged with trust and riddled by loneliness. Batra recreates 
Mumbai’s layer cake of solitude and solidarity exquisitely.
There’s also a hint of nostalgia in things like passing messages
 in hidden chits of paper, sharing lunches, making friends with
 the oddball. Internet and social media haven’t invaded the lives
 of Saajan, Ila and Aslam. Their relationships are delicately wrought
 using carefully-chosen words. They’re constrained not by character
 count, but by shyness and social circumstances.
Frequently funny and constantly subtle, The Lunchbox
 isn’t really a love story. 
What develops between Saajan and Ila is something far more 
tender than the flamboyancy we usually associate with romance
 in Indian cinema. This is a fragile companionship that 
nevertheless strengthens both of them, making them feel 
a little more vibrant and alive.
Saajan and Ila have been superbly portrayed by Khan and Kaur. 
Khan as Saajan transforms from forgettable to charming with 
elegant ease, his character blossoming into life thanks to Ila’s 
dabbas. No doubt well-written roles like this one make up for 
films like D-Day and The Amazing Spiderman. Kaur, whom 
we last saw in an ad, making an unnecessary chocolatey mess 
while stuck at a traffic light, is luminous as Ila. It’s a role that
 demands a range out of Kaur, and she delivers. In comparison
 to these two, Siddique’s Aslam is a sliver of a role, but much 
of the fun in the film comes from Aslam’s irrepressible good cheer.
Perhaps the most intriguing character in The Lunchbox is the
 one we never see: Auntyji (voiced by Bharti Achrekar), who lives
 in the flat above Ila and is house-bound because she must look 
after her paralysed husband. 
She’s a delight and ever ready to supply Ila with whatever 
the younger woman needs, whether it’s encouragement to
 write to Saajan or special mix of spices for a recipe.
Ila and Auntyji cheerfully chatter with one another, their voices being 
carried in and out of Ila’s kitchen window.
 For both, the other’s faceless voice helps drown out the white noise
 of solitude that comes from living with a husband who doesn’t notice them. 
Swirling in Ila’s cooking are the hopes and longings of two 
fantastic women, whose only outlet is in the dabba savoured
 by a stranger.
 ....................a delicious, beautiful little film.