Showing posts with label தமிழ்புத்தாண்டு - கடலைப் பருப்பு வடை. Show all posts
Showing posts with label தமிழ்புத்தாண்டு - கடலைப் பருப்பு வடை. Show all posts

Friday, April 13, 2012

தமிழ்புத்தாண்டு - கடலைப் பருப்பு வடை


Vadai
போல்ட் ஸ்கை  வியாழக்கிழமை, ஏப்ரல் 12, 2012, 17:41 [IST]

தமிழ்புத்தாண்டு தினத்தன்று பெரும்பாலானவர்கள் வீடுகளில் பருப்பு வடையும், பருப்பு பாயசமும் செய்வது வழக்கம். கடலைப் பருப்பு வடை புரதச் சத்து மிக்கது. எளிதாக செய்யலாம். இந்த புத்தாண்டில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்களேன்


தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - ஒரு கப்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் - 3

பூண்டு, இஞ்சி தட்டியது – 2 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லி இலை - அரை கப்

சோம்பு - அரை டீ ஸ்பூன்

மிளகு பொடித்தது – 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் பொரிக்க – 250 மிலி

பருப்பு வடை செய்முறை

கடலைப் பருப்பை நான்கு மணிநேரம் ஊறவைத்து மிக்சியில் கரகரப்பாக, கெட்டியாக அரைத்து எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவை கொட்டி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி போடவும். சோம்பு, மிளகை நுணுக்கி போடவும். தட்டி வைத்துள்ள இஞ்சிப் பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.

அகலமான தட்டில் உருண்டையாக பிடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்த உடன் வடை மாவை நன்றாக தட்டி போடவும்.

பொன்னிறமாக வேகும் வரை திருப்பி போடவும். வடை வெந்த உடன் எடுத்து சூடாக சாப்பிடலாம். உடன் தேங்காய் சட்னி இருந்தால் கூடுதல் சுவை தரும். புரதச் சத்து நிறைந்த வடை அனைவருக்கும் ஏற்றது.