Showing posts with label மீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும் – ஆய்வில் தகவல். Show all posts
Showing posts with label மீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும் – ஆய்வில் தகவல். Show all posts

Saturday, December 17, 2011

மீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும் – ஆய்வில் தகவல்



Tandoori Fish


   ஒன்இந்தியா :     சனிக்கிழமை, டிசம்பர் 10, 2011,


மீன் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு மூளை சுறு சுறுப்படைவதோடு பக்கவாதம் வரும் வாய்ப்பும் குறைவு என்று நரம்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமே இத்தகைய மாயா ஜாலத்தை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தின் மஸ்கே பல்கலைக்கழக குழுவினர் மீன் உணவு உட்கொள்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 176 பேரை தேர்வு செய்து வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களை 6 மாதங்களாக கொடுத்து ஆய்வு செய்தனர். இதில் அவர்களுக்கு ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்து இருந்தது தெரிய வந்தது. மேலும் அறிவுக் கூர்மையும் ஏற்பட்டிருந்தது.மீன்களில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம்தான் ஞாபக சக்தி அதிகரிப்புக்கு காரணம் என்று ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

மூளை சுறு சுறுப்பு

ஒமேகா 3 அமிலம் மனித உடலுக்கு நல்லது என்று ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஒமேகா-3 அமிலம் மனிதனின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே மீன்கள் அதிகம் சாப்பிட்டால் அறிவுக்கூர்மை ஏற்படும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் என்று ஆய்வாளர்கள் கூறினார்கள்.

மீன்களின் சிறப்பு

ஒமேகா-3 அமிலம் மனிதனின் உடலில் இயற்கையாகவே சுரப்பது இல்லை. மற்ற உணவுப் பொருட்களிலும் இவை இருப்பதில்லை. மீன்களில் மட்டுமே ஒமேகா-3 இருக்கிறது. எனவே மீன் சாப்பிட்டால் மட்டுமே ஒமேகா-3 கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பக்கவாதம் வராது

மேலும் மீன் உணவானது பக்கவாதம் வரும் வாய்ப்பையும் குறைப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 3600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாரம் மூன்று முறை மீன் உணவுகளை உண்ணக்கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களின் மூளையில் பக்கவாதம் ஏற்படுத்தும் நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் படிப்படியாக குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.