போல்ட் ஸ்கை :வியாழக்கிழமை, ஜூன் 14, 2012, 14:30
எல்லாரும் இப்போதெல்லாம் ஐஸ்கிரீம், சிப்ஸ், பிஸ்கட், ஃபாஸ்ட் புட்-ன்னு அதிகமாக சாப்பிடுகிறார்கள். அதுவும் இதை வேலை செய்பவர்கள் அதிகம் உண்பதால் அவர்களுக்கு பசியானது அடிக்கடி சீக்கிரமாக ஏற்படுகிறது. அப்போது அவர்களால் வேலையை சரியாக செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதனால் அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள் என்று விஞ்ஞானப்பூர்வமாக கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். மேலும் ஒரு சில உணவுகளை உண்டால் மனச்சோர்வு ஏற்படாது என்றும் கூறி அந்த உணவுகளையும் பட்டியலிட்டுள்ளனர்.
1. பாதாம் பருப்பு - அதில் அளவுக்கு அதிகமாக மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு ஏற்படும். மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக் கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.
2. கடல் உணவு - கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது சற்று ரிலாக்ஸ் ஆக இருப்பதோடு, சற்று புத்துணர்ச்சியோடும் இருக்கும். மேலும் இவற்றை உண்பதால் மனதில் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் நீங்கி, மனச்சோர்வும் கட்டுப்படும்.
3. பால் - மனச்சோர்வோடு இருப்பவர்கள் பால் அல்லது பால் பொருளான தயிரை உணவில் அதிகம் சேர்க்கலாம். ஏனெனில் பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக இருப்பதோடு, தேவையில்லாத எண்ணங்களால் ஏற்படும் மனச்சோர்வும் அகலும்.
4. சிக்கன் - இதுவரை நாம் சிக்கன் உண்பதால் நலம் என்று யார் சொல்லியும் கேட்டிருக்க மாட்டோம். ஆனால் இப்போது சிக்கன் பிடித்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி, சிக்கனில் அதிகமாக புரோட்டீன், உடலுக்குத் தேவையான அமினோ ஆசிட் இருப்பதால், இது மனதை அமைதிப்படுத்தி, ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான சக்தியைத் தருகிறது.
5. கார்போஹைட்ரேட் - எடை குறைய வேண்டுமென்று உணவில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை சாப்பிடாமல் இருக்க வேண்டாம். கார்போஹைட்ரேட் உள்ள உணவு எடையை அதிகரிக்கும் தான், ஆனால் அதே சமயம் கொஞ்சம் கூட சேர்க்காமல் இருக்க கூடாது. இதனால் மனச்சோர்வு தான் ஏற்படும்.
6. சாக்லேட் - மனச்சோர்வு குறைய சாக்லேட் கூட ஒரு சிறந்த உணவு. ஏனெனில் கோக்கோவில் அதிகமாக ஆன்டி-டிப்ரசன் பொருள் உள்ளது. சாக்லேட் சாப்பிடும் போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்டமின் பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைக்கும்.
ஆகவே டயட் மேற்கொள்பவர்கள் மேற்சொன்ன அனைத்து உணவுகளையும் மனதில் கொண்டு கடைபிடியுங்கள். இதனால் எடை குறைவதோடு, உடலானது ஆரோக்கியமாகவும், மனச்சோர்வு இல்லாமலும் இருக்கும்.
No comments:
Post a Comment