Showing posts with label ஜவ்வரிசி. Show all posts
Showing posts with label ஜவ்வரிசி. Show all posts

Saturday, December 14, 2013

சுவையான ஜவ்வரிசி கிச்சடி

சுவையான ஜவ்வரிசி கிச்சடி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த ஜவ்வரிசி கிச்சடியை காலை உணவாகவோ அல்லது மாலை சிற்றுண்டியாகவோ உண்ணலாம்.
தேவையான பொருட்கள்
  • ஜவ்வரிசி – 1  கப்
  • வேர்க்கடலை – 4  மேசைக்கரண்டி
  • உருளைக்கிழங்கு – 1 நடுத்தரமானது
  • பட்டாணி – 1/4 கப்
  • உடைத்த முந்திரிப்பருப்பு – 4 – 5
  • பச்சை மிளகாய் – 2
  • காய்ந்த மிளகாய் – 1
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • சீரகம் – 1 /4 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
  • பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • மல்லித்தழை – சிறிது
  • தேங்காய் துருவியது – 1  தேக்கரண்டி
  • எலுமிச்சம்பழச்சாறு – 2  தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  1. ஜவ்வரிசியை நன்கு கழுவி 6 – 8 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  2. நன்கு ஊறிய பின்பு தண்ணீரை சுத்தமாக வடித்து விடவும். வடிக்கும் பாத்திரத்திலேயே 1 மணி நேரத்திற்கு விட்டு விடலாம்.
  3. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை மற்றும் முந்திரியை பிரவுன் கலராகும் வரை வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.
  4. அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில், கடுகு, பெருங்காயம், சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. இதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து மிருதுவாகும் வரை வதக்கவும். உருளைக்கிழங்கு வதங்கியவுடன் பட்டாணி, மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மேலும் 2  நிமிடங்கள் வதக்கவும்.
  7. இறுதியாக ஊற வைத்து வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து சேர்த்து 2  – 3 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஜவ்வரிசி நிறம் மாறும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும்.ஜவ்வரிசியை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வதக்கி, 5 -7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  8. இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, வேர்க்கடலை, மல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்து கலக்கி இறக்கி வைக்கவும்.
  9. குறிப்பு
  10. ஜவ்வரிசியை 6  – 8 மணி நேரங்கள் ஊற வைக்க முடியவில்லையெனில், வெது வெதுப்பான நீரில் 2 – 3  மணி நேரங்கள் ஊற வைத்தால் போதுமானது. தண்ணீர் மிகவும் சூடாக
    இருக்கக் கூடாது, வெது வெதுப்பாக இருக்க வேண்டும்.