சுவையான ஜவ்வரிசி கிச்சடி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு. இந்த ஜவ்வரிசி கிச்சடியை காலை உணவாகவோ அல்லது மாலை சிற்றுண்டியாகவோ உண்ணலாம்.
தேவையான பொருட்கள்
- ஜவ்வரிசி – 1 கப்
- வேர்க்கடலை – 4 மேசைக்கரண்டி
- உருளைக்கிழங்கு – 1 நடுத்தரமானது
- பட்டாணி – 1/4 கப்
- உடைத்த முந்திரிப்பருப்பு – 4 – 5
- பச்சை மிளகாய் – 2
- காய்ந்த மிளகாய் – 1
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- சீரகம் – 1 /4 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
- பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- மல்லித்தழை – சிறிது
- தேங்காய் துருவியது – 1 தேக்கரண்டி
- எலுமிச்சம்பழச்சாறு – 2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- ஜவ்வரிசியை நன்கு கழுவி 6 – 8 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- நன்கு ஊறிய பின்பு தண்ணீரை சுத்தமாக வடித்து விடவும். வடிக்கும் பாத்திரத்திலேயே 1 மணி நேரத்திற்கு விட்டு விடலாம்.
- கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை மற்றும் முந்திரியை பிரவுன் கலராகும் வரை வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில், கடுகு, பெருங்காயம், சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து மிருதுவாகும் வரை வதக்கவும். உருளைக்கிழங்கு வதங்கியவுடன் பட்டாணி, மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இறுதியாக ஊற வைத்து வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஜவ்வரிசி நிறம் மாறும் வரை வதக்கிக் கொண்டே இருக்கவும்.ஜவ்வரிசியை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வதக்கி, 5 -7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
- இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, வேர்க்கடலை, மல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்து கலக்கி இறக்கி வைக்கவும்.
- குறிப்பு
- ஜவ்வரிசியை 6 – 8 மணி நேரங்கள் ஊற வைக்க முடியவில்லையெனில், வெது வெதுப்பான நீரில் 2 – 3 மணி நேரங்கள் ஊற வைத்தால் போதுமானது. தண்ணீர் மிகவும் சூடாகஇருக்கக் கூடாது, வெது வெதுப்பாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment