தேவையானவை:
முந்திரிப் பருப்பு - 30
காய்ந்த திராட்சை - 20
புழுங்கலரிசி - 100 கிராம்
பால் - 3/4 லிட்டர்
சர்க்கரை - 300 கிராம்
நெய் - 25 கிராம்
பால் பவுடர் - 100 கிராம்
தண்ணீர் - தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை :
புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். சிறிது சூடான நீரில் பால்பவுடரைப் போட்டு கட்டியாக இல்லாமல் நீர்மம் போல் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 3/4 லிட்டர் பாலை உற்றி, அதில் ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை போட வேண்டும். கொதிக்கும் போது ஊறவைத்த அரிசியை போட வேண்டும். அரிசி நன்றாக வெந்தப் பிறகு, ஏற்கனவே தண்ணீரில் கலந்துவைத்த பால்பவுடரை அத்துடன் சேர்த்து கலக்க வேண்டும். பாயாசம் பதத்திற்கு வந்தவுடன் தேவைக்கேற்ப சர்க்கரை போட்டு நன்றாக கலக்கவும்.
உங்களுக்கு பாயாசம் போல் வேண்டும் என்றால் நீர்மமாக இருக்கும்போதே இறக்கி வைக்கலாம் அல்லது க்ரீமி (creamy) பதத்தில் வேண்டும் என்றால் சிறிது சுண்டியவுடன் இறக்கலாம். பிறகு நெய்யில் முந்திரிகளையும் திராட்சைகளையும் வறுத்து அதன் மேலே அலங்கரிக்கவும்.
ஸ்வீட் ரைஸ் கீர் ரெடி...
No comments:
Post a Comment