Wednesday, June 5, 2013

வித்தியாசமான வெந்தயக் கீரை சப்பாத்தி


methi missi roti healthy breakfast

போல்ட் ஸ்கை : Maha : 5 june 2013


சப்பாத்திகளில் நிறைய உள்ளன. அவை அனைத்தும் விருப்பதைப் பொறுத்ததே. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வெந்தயக் கீரையை வைத்தும் சப்பாத்தி செய்ய முடியும்.

 பொதுவாக சப்பாத்தியில் கோதுமை மாவை மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்த சப்பாத்தியில் கோதுமை மாவுடன், கடலை மாவையும் சேர்த்து செய்யப் போகிறோம். 

அதனால் இதன் சுவை சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

 இப்போது அந்த வித்தியாசமான வெந்தயக் கீரை சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!



தேவையான பொருட்கள்: 


வெந்தயக் கீரை - 1 கப் (நறுக்கியது) 

கோதுமை மாவு - 2 கப் 

கடலை மாவு - 1 கப் 

பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) 

வெங்காயம் - 1 (நறுக்கியது)

 ஓமம் - 1/2 டீஸ்பூன்

 மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு, வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், வெங்காயம், ஓமம், மிளகாய் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

 பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

 இப்போது சுவையான வெந்தயக் கீரை சப்பாத்தி ரெடி!!!

 இதனை சாம்பார் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.




No comments:

Post a Comment