Sunday, June 15, 2014

தந்தையாக இருப்பது கடினமான பணி: ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா.| கோப்புப் படம்.
தி இந்து:ஞாயிறு, ஜூன் 15, 2014

தந்தையாக இருப்பது மிகவும் கடினமான ஆனால் அதுவும் பெருமைக்குரிய பணிதான்' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவில் தந்தையர் களைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையை தந்தையர் தினமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (ஜூன் 15) கொண்டாடப்படுகிறது.

இரண்டு பெண் குழந்தைக ளுக்குத் தந்தையான ஒபாமா தனது தந்தையர் தின உரையில் கூறும்போது, "தந்தையாக இருப்பதுதான் மிகவும் கடினமான பணி.
எப்போதும் கவனிப்புடனும், அவ்வப்போது தியாகங்களையும் தேவையான அளவுக்குப் பொறுமையையும் வேண்டும். தந்தையின் இருப்பு, ஆதரவு, அக்கறைக்கு நிகரானது எதுவும் இல்லை. தங்களின் குழந்தைகளுக்கு ஆசானாக, நண்பனாக, முன் மாதிரியாக தந்தையர்களே இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு கடின உழைப்பையும், நேர்மையையும் கற்றுத் தருகிறார்கள்.
திருமணமாகி இருந்தாலோ, விவாகரத்தாகி இருந்தாலோ எப்படியிருந்தாலும், ஒரு குழந்தைக்கு தந்தையின் அரவணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. வாழவும் வளரவும் கற்றுத்தரும் தந்தையர் களுக்கு இந்த தந்தையர் தினத்தில் எங்களின் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment