Friday, April 13, 2012

நந்தன தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்



Panchangam

ஆதாரம் :நந்தன வருஷத்திய பஞ்சாங்கம்

புதிதாக பிறக்கப்போகும் நந்தன ஆண்டு நல்ல மழை பெய்யுமாம், அமோக விளைச்சல் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி குறையும் என்றும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிறக்கப் போகிறது என்றாலே பலருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். வரப்போகும் புத்தாண்டு எப்படி இருக்குமோ? இந்த வருடமாவது வளமான எதிர்காலம் அமையுமா? விலைவாசி குறையுமா? என்ற கேள்வி எழுவது வாடிக்கை. அதேபோல் பிறப்போகும் தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. படித்துப் பாருங்களேன்.

நந்தன வருடத்தில் நல்ல மழை 

தமிழ் வருடங்கள் 60 ல் நந்தன வருடம் 26 வது ஆண்டாகும். ஏப்ரல் மாதம் 13ம் நாள் வெள்ளிக்கிழமை புது வருடம் பிறக்கிறது.

சித்திரை முதல் நாள் எந்த கிழமையில் பிறக்கிறதோ அதைப் பொறுத்து பலன் ஏற்படும் வெள்ளிக்கிழமை வருடப்பிறப்பு என்பதால் பஞ்சாங்கப் பலன் படி பெருமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. பலத்த மழையினால் உதகமண்டலம், கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாழ் மாவட்டங்களில்

நிலச்சரிவுகள் ஏற்படும்.

இந்த ஆண்டு வர்த்தக மேகம் உற்பத்தி ஆவதால் நல்ல மழை பொழிந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஆண்டு 9 புயல்கள் உண்டாகும். அதில் நான்கு பலஹீனமடைந்துவிடும். 5 புயல்களினால் எல்லா பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும். ஆறு, குளம், கால்வாய், குட்டை, ஏரி, அணைகள், கண்மாய்களில் நீர் நிரம்பி வழியும்.

இந்த ஆண்டு ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் கொந்தளிப்பு, சீற்றம் ஏற்படும். சூறாவளிக் காற்றால் கடலோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

விலைவாசி குறையும்

இந்த ஆண்டு தான்யாதிபதியாக சூரியன் வருவதால் நெல், அரிசி, நவதான்யங்கள் விலை கொஞ்சம் குறையும். தேயிலை, காபி, நறுமணப்பொருட்கள்,மிளகாய், புளி, உள்ளிட்ட மளிகைச் சாமான்கள் விலை குறையும்.

அரசியல் மாற்றங்கள்

முக்கிய பதவிகளில் இருக்கும் தலைவர்களுக்கு பயம் ஏற்படும். மத்திய அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகளும், உட்கட்சி பூசல்களும் ஏற்படும். இந்த ஆண்டு மந்திரியாக சுக்கிர பகவானாக வருவதால் வேலை இல்லா திண்டாட்டம் குறையும்.

நிதி நிலைமை விபரம்

இந்த ஆண்டு ஆதாயம் 65 விரையம் 62 ஆக வருகிறது. விரையத்தை விட ஆதாயம் 3 அதிகமாக வருகிறது எனவே மத்திய, மாநில அரசுகளின் நிதி நிலை சீராக இருக்கும். இந்த ஆண்டு தங்கம் வெள்ளி நகைகள் சற்று ஏறி, இறங்க வாய்ப்புள்ளது.


No comments:

Post a Comment