Wednesday, April 4, 2012

சத்தான சன்னா

Chenna Masala
போல்ட் ஸ்கை

கொண்டைக் கடலை புரதச் சத்து நிறைந்தது. இதனை வேகவைத்து சுண்டல் செய்து சாப்பிடலாம். இதில் குழம்பு வைக்கலாம். கெட்டியாக மசாலா செய்து சாப்பிடலாம் சத்தான, சுவையான உணவு இது. அனைவரும் எளிதாக செய்ய முடியும். 

தேவையான பொருட்கள்
சன்னா - ஒரு கப்

உருளைக்கிழங்கு - 2

தயிர் - கால் கப்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்

தனியாதூள் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 2

கிராம்பு - 3

இஞ்சி பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தனியாக அரைக்க:

வெங்காயம் - 2

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 2

சன்னா மசாலா செய்முறை

சன்னாவை நன்றாக ஊற வைத்து வேக வைத்து தனியாக வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் விழுதினை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதோடு இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதோடு மிளகாய்த்தூள், மல்லித்தூள், உள்ளிட்ட அனைதூள்களையும் போட்டு அதோடு உப்பு சேர்த்து வாசனை போக நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இந்த கலவையில் தயிரை ஊற்றி கிளறவும். அடுத்து உருளைக்கிழங்கு, மற்றும் சன்னாவை 5 நிமிட கால இடையெளியில் ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் மசாலா சேரும் வரை அடுப்பில் வைக்கவும். சுவையான சன்னா மசாலா தயார். சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையானது. இது குழந்தைகளுக்கும் ஏற்ற சத்தான உணவு.

No comments:

Post a Comment