Saturday, October 5, 2013

பழம் சாப்பிட்டால் நீரிழிவைத் தடுக்கலாம்


தி இந்துசனி, அக்டோபர் 5, 2013

தினமும் பழங்களைச் சாப்பிட்டுவந்தால், நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 

இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம், உடல் ஆரோக்கியம் தொடர்பான 25 ஆண்டுத் தரவுகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளது.

குறிப்பாக திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து 25 சதவிகிதம் குறைகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பழச்சாறு குடிக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது. 

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த மக்களுடைய பதிவுகளிலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதும், இந்தியாவில்தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம். 

தமிழகத்தில் சுமார் 10 சதவிகிதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுவதால், இந்த ஆராய்ச்சி நமக்கும் முக்கியமானதாகிறது.

No comments:

Post a Comment